[X] Close

ரஷ்யாவில் 8 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

உலகம்

Russia-crossed-8-lakh-corona-cases

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,45,443 ஆக உயர்ந்துள்ளது அந்நாட்டு அரசுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,78,55,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,84,811 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 95 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 14,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,114 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 6,46,524 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,84,861 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

image

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் 47,26,113 பேர், இரண்டாம் இடத்தில் பிரேசிலும் 26,66,298 பேர், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் 17,35,745 பேர் உள்ளன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close