Published : 01,Aug 2020 06:24 PM

’சோனு சூட்’ சேவையைப் பாராட்டிய பிரியங்கா சோப்ரா

Priyanka-Chopra-praises-Sonu-Sood-service

கடந்த மார்ச் 24 ஆம் தேதிமுதல் இந்தியா முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கால்நடையாகவே குழந்தைகளோடு புறப்பட்ட துயர சம்பவத்தை உலகமே உற்றுநோக்கியது.

image

அரசுகளே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சூழலில், நடிகர் சோனு சூட் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்து வசதி ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். அதோடு, சமீபத்தில் ஆந்திராவில், ஏழை விவசாயியின் மகள்கள் கலப்பையை பூட்டி உழுவதைப் பார்த்த சோனு சூட் டிராக்டர் வாங்கிகொடுத்து உதவினார். சோனு சூட்டின் இந்த சேவையைப் பாராட்டி பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் “சோனு சமீபத்தில் ஆந்திராவில் ஒரு விவசாயிக்கு ஒரு டிராக்டரை அனுப்பினார். தனது வயலை உழுவதற்கு எருது ஒன்றை வாடகைக்கு எடுக்கக்கூட பணம் இல்லை. சோனு நீங்கள் செய்கிற அனைத்து அற்புதமான வேலைகளிலும் பெருமையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்