ஆண் குழந்தையை விரும்பி, பெண் குழந்தை பிறந்ததால் தந்தையே குழந்தையை வாயிக்குள் விரலை விட்டுக் கொன்ற சம்பவம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் உள்ள நாஸ்லோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார். இவரது மனைவி மீனா தேவி (27). இவர்கள் இருவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணமான நாளிலிருந்தே ஹரிஷ் குமார் மீனாவிற்கு உடலளவிலும் மனதளவிலும் பல தொல்லைகளை அளித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் கருவுற்றிருந்த மீனா கடந்த புதன் கிழமை மீண்டும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால் ஹரிஷ் ஆண் குழந்தையை எதிர்பார்த்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து மீனாவிடம் சென்ற ஹரிஷ் குழந்தையைப் அவரிடம் இருந்து பறித்து தலைகீழாக தொங்கவிட்டு குழந்தையின் வாயினுள் விரலை விட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து குழந்தையை தூக்கிச் சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பி குழந்தையை அடக்கம் செய்து விட்டதாக மீனாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கணவர் மீது மீனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்