Published : 01,Aug 2020 01:58 PM
கேரள தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்டு 21 வரை நீதிமன்ற காவல்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்டு 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை அவர்களின் வீடுகளுக்கே அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த சூழலில் ஆகஸ்டு 21 ஆம் தேதிவரை ஸ்வப்னா சுரேஷை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.