கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அடிமட்ட அளவில் மிகவும் துணிச்சலான சீர்த்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், லிங்க்டுஇன் வலைதளத்தில் நடந்த உரையாடலில் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “ரிசர்வ் வங்கியின் பேலன்ஸ்ஷீட்டை விரிவுபடுத்துவதற்கான இடம் "எல்லையற்றது" அல்ல. பணவீக்கத்தைக் கண்காணிப்பதில் ரிசர்வ் வங்கி அதிகம் கவனம் செலுத்தவேண்டும். துணிச்சலான சீர்திருத்தங்கள் மூலம் மிருக பலத்தைப்போன்ற உத்வேகம் உருவாக்கப்படவேண்டும். வேளாண் துறையில் அறிவிக்கப்பட்ட சில சாத்தியங்களைப் பார்க்கமுடிகிறது. ஆனால் அதைவிட அதிகமாக நமக்குத் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அடுத்த சில ஆண்டுகளில் செய்தால், வெறும் பேச்சாக அல்லாமல், உண்மையிலேயே அடிமட்ட அளவில் செயல்படுத்தினால் நமக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்று நம்பிக்கை அளிக்கும் ரகுராம் ராஜன், "நாம் பேசிக்கொண்டே சிறிய அளவில் செயல்களைத் தொடர்ந்தால், நாம் நழுவிவிடுவோம் என்றே நினைக்கிறேன், மெதுவான வளர்ச்சியின் விளைவுகளைக் கண்டு பயப்படுகிறேன். இன்று நமக்கு வலிமையான, நீடித்த, புத்திசாலித்தனமான நடவடிக்கையே தேவைப்படுகிறது” என்றும் எச்சரிக்கிறார்.
தற்போது ரகுராம்ராஜன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!