[X] Close

இலவச டேட்டாவை 3 மாதம் நீட்டித்தது ஏர்டெல்

Airtel-extends-free-data-offer-for-3-months

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள 30 ஜிபி இலவச டேட்டா திட்டம், மேலும் 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. 

ஜியோவின் வரவால் வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்கள் 30 ஜிபி வீதம் மாதம் 10 ஜிபி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. மழைகால சலுகையாக, இந்த சலுகையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு இந்த இலவச டேட்டா திட்டம் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த சலுகையை மை ஏர்டெல் செயலி மூலம் ஜூலை 1-ம் தேதி முதல் பெற முடியும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.  
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close