வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுனரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ்(38). இவர் டிரஸ்ட்புரம் 9வது தெருவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ ஸ்டாண்டில் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
கடந்த 28ஆம் தேதி அபிஷேக் என்பவர் குடிபோதையில் வந்து ஆட்டோ வேண்டும் என அனைவரிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சத்யராஜ் அபிஷேக்கை திட்டியதாக தெரிகிறது. மேலும் ஆட்டோ ஓட்டுனரான ஆரி மற்றும் குள்ளு ஆகியோர் அபிஷேக்கை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
இந்த நிலையில் அபிஷேக்கின் நண்பர்களான ஐயப்பன், மணிகண்டன் உட்பட 6 பேர் ஆட்டோ ஸ்டாண்டிற்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் கோடம்பாக்கத்தில் உள்ள சத்யாராஜின் வீட்டிற்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக சத்யாராஜை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சத்யாராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிசைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் 7பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai