[X] Close

பெண்கள் உலகக் கோப்பை: இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை

Indian-women-s-cricket-team-captain-sets-new-achievement

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதமடித்த இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தொடர்ந்து 7 அரைசதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். 


Advertisement

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய பெண்கள் அணி, பூனம் ராவத், ஸ்மிர்தி மந்தனா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ராவத் 86 ரன்களும், ஸ்மிர்தி 90 ரன்களும் எடுத்தனர். மிதாலி ராஜ் 71 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7ஆவது அரைசதத்தினை பதிவு செய்து தொடர்ச்சியாக அதிக அரைசதங்களை பதிவு செய்த வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்தார். இதற்கு முன்னதாக தொடர்ச்சியாக 6 அரைசதங்களை 4 வீராங்கனைகள் அடித்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. இதுவரை 177 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ், 5,781 ரன்கள் குவித்துள்ளார். 
 


Advertisement

Advertisement
[X] Close