Published : 28,Jul 2020 08:47 PM

வாகை சூடிய இங்கிலாந்து - படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ்

ENGLAND-BEATS-WEST-INDIES-IN-TEST-SERIES

கிரிக்கெட் விளையாட்டின் தாய்மண்ணான இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வெல்ல பரபரப்பான கட்டத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பனாது. 

image

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸை வென்றதும் பவுலிங்கை தேர்வு செய்ய மந்த நிலையில் பொறுமையாக ரன்களை சேர்த்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். முதல் இன்னிங்கிஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் அபார ஆட்டத்தால் 369 ரன்களை குவித்தது அந்த அணி. அதனையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 197 ரன்களுக்கு ஆல் அவுட்.

image

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 226 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தனர். அதனையடுத்து 399 ரன்களை இலக்காக விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 129 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்த வெற்றி இங்கிலாந்து அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார் கேப்டன் ஜோ ரூட்.

image

பென் ஸ்டோக்ஸ், டாம் சிப்லே, பெர்ன்ஸ், போப், ஆண்டர்சன், பிராட், வோக்ஸ் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் மாஸ் காட்டியிருந்தனர். பிராட் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர் என்ற சாதனையை படைத்தார். இந்த தொடரின் நாயகன் விருதையும் அவரே வென்றார்.

image

சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளின் டாப் 10 பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆள் ரவுன்டர்களில் ஒருவராக இங்கிலாந்து அணி வீரர்கள்  உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்