[X] Close

111வது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடிய மதுரையின் எவர் கிரீன் தாத்தா காலமானார்..!

சிறப்புச் செய்திகள்

Evergreen-grandfather-of-Madurai

சமீபத்தில் 111 வது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மதுரையின் எவர் கிரீன் தாத்தா இன்று வயது முதிர்வால் காலமானார்.


Advertisement

மதுரை கே. புதூர் சாலை பகுதியை சேர்ந்த 111 வயது முதியவர் பெருமாள் தாத்தா. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியை பூர்வீகமாக கொண்ட பெருமாள் தாத்தா 5ம்வகுப்பு வரை படித்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், வறுமையின் காரணமாக சிறு வயதிலேயே வேலை தேடி மதுரைக்கு வந்துள்ளார். பின்பு தனியார் பஞ்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்

image


Advertisement

image 1
ஓய்வுக்குப் பின்னர் தங்களது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்ததுடன், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்துவந்தார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். 1941 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு 7 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 11 பிள்ளைகளும், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி, என 35 பேரும் உள்ளனர்.

சிறுவயது முதல் வறுமையிலேயே வாழ்வை கழித்தஇவர், வேலை, வீடு, நேரத்திற்கு உணவு என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்ததோடு, அப்போதையை உணவு வகைகளான கேழ்வரகு, கம்பு, திணை உள்ளிட்ட தானிய வகை உணவுகளை விரும்பி உண்ணுவதை சிறு வயது முதல் வாடிக்கையாக கொண்டிருந்தார். அதனால்தான் இதுவரை உடல் நலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்து வந்துள்ளார்.

image


Advertisement

image 2
தற்போதுவரை தனது தேவைக்காக மற்றவர்களை எந்தவித தொந்தரவும் செய்யாமல் தனக்கான தேவைகளை தானே செய்யும் பெருந்தன்மையை கொண்டிருந்தவர், தனது ஆடைகளை தானே சலவை செய்வது, வீட்டை சுத்தம் செய்து கொள்வது, எந்தவித துணையும் இல்லாமல் தாமாகவே நடைப்பயிற்சி செய்வது என தன்னம்பிக்கையின் கதாநாயகனாக திகழ்ந்து வந்த பெருமாள் தாத்தாவின் பிறந்த தினமான ஜூன் 25ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் தனது பிள்ளைகள் மற்றும் பேரகுழந்தைகளுடன் செந்த பந்தங்களும் சேர்ந்து கேக்வெட்டி கொண்டாடி வந்த நிலையில் கடந்த ஜூன் 25ம் தேதி தனது 111 வது பிறந்த நாளை சுற்றம் மகிழ கொண்டாடினர்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார் பெருமாள் தாத்தா. இந்த குடும்பத்தின் பொக்கிஷமாகவும் முன் உதாரணமாகவும் இருந்து வந்த நிலையில் அவரின் இழப்பு இந்த குடும்பத்திற்கு பேரிழப்பாக உள்ளதாக குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்தனர்.

image

image 3
111 வயதாகியும் இதுவரை ஒருநாள் கூட காய்ச்சல் அடிக்குது தலைவலிக்குது கால்வலிக்குது என ஒருநாளும் சொன்னதில்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பேன வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் எங்க தாத்தா என பேரக்குழந்தைகள் பெருமையாக கூறினர்.

ஓய்வின்றி எப்பொழுதும் வேலை வேலை என ஓடிக்கொண்டு உரிய நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமல் பாஸ்ட் புட் உணவுகளை உட்கொண்டும் சிறு வயதிலேயே அளவில்லாத நோய்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் இக்கால இளைஞர்கள் மத்தியில், இந்த காலத்திலும் அளவான உணவை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து 111 வயதை கடந்து வயது முதிர்வால் காலமான மதுரையின் எவர்கிரீன் தாத்தா, மதுரைக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு முன்னுதரணமாக திகழ்ந்திருக்கிறார் இந்த பெருமாள் தாத்தா...

Related Tags : மதுரைMadurai

Advertisement

Advertisement
[X] Close