1992-இல் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ஆர். குறிப்பிடத்தக்க பல படங்களில் பணியாற்றிய அவர் பாலிவுட்டில் தனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு காரணமாக ஒரு கும்பலே தனக்கு எதிராக செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.
பாலிவுட்டில் ஒரு கும்பலே தனக்கு எதிராக செயல்படுவதாக ரகுமான் கூறிய நிலையில் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாடகர்களான ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன், நடிகர்கள் மாளவிகா மோகனன், மீரா சோப்ரா, அசோக் செல்வன், வனிதா விஜயகுமார் உட்பட பல பிரபலங்கள் அவரை பாராட்டி ட்வீட் செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனருக்காக அவர் ஆஸ்கார் விருது வாங்கியதை சுட்டிக்காட்டி, பாராட்டுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
சமீபத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் ‘தில் பச்சாரா’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘’தில் பச்சாராவின் இசை, தவறான வதந்திகளை பரப்பும் எந்த கும்பலுக்கும் பதில். அந்த பாடல்களைக் கேட்கும்போது அந்த இசையில் சிறிது நேரம் காணாமல் போவதை இசை ஆர்வலர்கள் உணர முடியும்’’ என பாடகர் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்துள்ளார்.
’தில் பச்சாரா’ திரைப்படத்தின் இயக்குநர் முகேஷ் சாப்ரா, ஏ.ஆரிடம் பணிபுரிய போவதாக கூறியதற்கு இண்டஸ்டிரீயில் உள்ளவர்கள் முகேஷை எச்சரித்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
‘’முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தபோது, இரண்டு நாட்களில் அவருக்கு நான்கு பாடல்களைக் கொடுத்தேன். அவர் என்னிடம், ‘சார், எத்தனையோ பேர் என்னிடம் ரகுமானிடம் போகவேண்டாம் என்று சொன்னார்கள். அவர்கள் என்னிடம் கதை மேல் கதைகளை அடுக்கினார்கள்’’ என்று அவர் பகிர்ந்துகொண்டதாக ஏ.ஆர் கூறியிருந்தார். ஒரு முழு கும்பல் தனக்கு எதிராக செயல்பட்டு பாலிவுட்டில் பணியாற்ற விடாமல் தடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அவர், ‘’நான் விதியை நம்புகிறேன். ஏனெனில் எல்லாமே கடவுளிடம் இருந்து வந்தவை என நான் நம்புகிறேன். நான் எனது சொந்த திரைப்படங்களை ஏற்றுக்கொண்டு மற்ற செயல்களில் ஈடுபடுகிறேன். அனைவரும் என்னிடம் வருவதை வரவேற்கிறேன். நீங்கள் அழகான திரைப்படங்களை உருவாக்குகிறீர்கள், என்னிடம் வருவதை வரவேற்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!