Published : 27,Jul 2020 07:11 AM

விவசாயப் பண்ணை.. சைக்கிளிங்... ஊரடங்கு நேரம் குறித்து பகிர்ந்த பிரகாஷ்ராஜ்!

prakashraj-spends-time-with-his-son-in-the-lockdown-days--cycling

கொரோனா கொடுத்த கொடைகளில் ஒன்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கான நீண்ட விடுமுறை நாட்கள். நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருந்த நடிகர்கள் உள்பட பலரும் வீட்டில் இருந்து குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கக் கிடைத்த பொற்காலம் இது.

image

நடிகர் பிரகாஷ்ராஜ், ஊரடங்கு காலத்தில் தன் விவசாயப் பண்ணையில் செல்லமகனுடன்  சைக்கிளிங் செல்கிறார். பின்னர் மாலையில்  உணவாக பிஸ்ஸா, சாண்ட்விச் சாப்பிடும் புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் “என் மகன், மகள் மற்றும் டார்லிங் மனைவியுடன் பண்ணைக்கு வெளியே சைக்கிள் ஓட்டுகிறேன்” என்று எழுதிவிட்டு சில அழகான  படங்களையும் பதிவிட்டுள்ளார்.  

image

ஏற்கெனவே ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் சொந்த ஊருக்குப் புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் மட்டும் கொடுக்காமல் உணவு, தங்குமிடம் வழங்கி உதவினார். தன் பவுண்டேஷன் சார்பில்  தினமும் அவரது பண்ணையில் 500 பேருக்கு உணவு சமைத்துக் கொடுத்தது பற்றி எழுதியிருந்த பிரகாஷ்ராஜ், அவர்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்