அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரித்துள்ள படம், ’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இதில் அதர்வா, சூரி, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணீதா, அதீதி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். ஓடம். இளவரசு இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் ஃபெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, ‘ இந்தப்படத்துக்கு ’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ற தமிழ் தலைப்பை வைத்துள்ளனர். வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக் கூடாது. தமிழ் மேல் பற்றோடு தலைப்பை வைக்க வேண்டும். தயாரிப்பாளர் சிவா, இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி 4 கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது’ என்று கிண்டலாகச் சொன்னார்.
இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைக்கும் சத்யாராஜ் , ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி