Published : 24,Jun 2017 06:39 AM

இமானுக்கு சம்பளம் கொடுக்காதீங்க: ஷாக் கொடுத்த செல்வமணி!

Don-t-Give-Salary-to-D-imman---R-k--Selvamani

அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரித்துள்ள படம், ’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’.  இதில் அதர்வா, சூரி, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணீதா, அதீதி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். ஓடம். இளவரசு இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. 

விழாவில் ஃபெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, ‘ இந்தப்படத்துக்கு ’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ற தமிழ் தலைப்பை வைத்துள்ளனர். வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக் கூடாது. தமிழ் மேல் பற்றோடு தலைப்பை வைக்க வேண்டும். தயாரிப்பாளர் சிவா, இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி 4 கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது’ என்று கிண்டலாகச் சொன்னார்.

இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைக்கும் சத்யாராஜ் , ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்