Published : 24,Jun 2017 04:45 AM
பமீலாவுக்கு அடுத்த காதலர் கிடைச்சாச்சு!

பிரெஞ்சு கால்பந்து வீரர் அடில் ராமியை, பமீலா ஆண்டர்சன் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
’பே வாட்ச்’ மூலம் பிரபலமானவர் நடிகை பமீலா ஆண்டர்சன். பமீலாவின் முதல் கணவர் டோமி லீ. இருவரும் 3 வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் 1998ம் ஆண்டு பிரிந்தனர். இவர்களுக்கு பிரண்டன், டைலன் என்ற இரண்டு மகன்கள். இதையடுத்து கிட் ராக் என்பவரை திருமணம் செய்த பமீலா, ஒரு வருடம் வாழ்ந்தார். பிறகு விவாகரத்து செய்தார். அடுத்து ரிக் சாலமனை திருமணம் செய்து விவாகரத்து செய்த பமீலா, மார்க்கஸ் என்பவருடன் வாழ்ந்து வந்தார். பிறகு முதல் கணவர் டோமி லீயுடன் வாழ்ந்து வந்தார். அடுத்து அவரைப் பிரிந்து இரண்டாவது கணவர் கிட் ராக்குடம் சேர்ந்து வாழ்ந்தார். பின் அவரிடம் இருந்தும் பிரிந்தார்.
இந்நிலையில் கிசு கிசு, திருமணம், விவாகரத்து என்கிற எந்த பஞ்சயாத்துமில்லாமல் சிறிது காலம் வாழ்ந்த பமீலா, இப்போது மீண்டும் செய்தியில் அடிபட்டிருக்கிறார். இவர் பிரெஞ்சு கால்பந்து வீரர் அடில் ராமியை காதலித்து வருகிறார் என்பதுதான் அந்த செய்தி. இருவரும் ஒன்றாக சுற்றிவருவதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டிருக்கிறது.
அடில் ராமிக்கு வயது 31-தான். ஆனால் பமீலாவுக்கு, 49 என்கிறது விக்கிபீடியா.
காதலுக்கு ஏது வயசு வாய்க்கால் பாஸூ!