திண்டுக்கல் அருகே குளங்களில் கொட்டப்படும் குப்பை - மூச்சுத்திணறலால் அவதிப்படும் மக்கள்

திண்டுக்கல் அருகே குளங்களில் கொட்டப்படும் குப்பை - மூச்சுத்திணறலால் அவதிப்படும் மக்கள்
திண்டுக்கல் அருகே குளங்களில் கொட்டப்படும் குப்பை - மூச்சுத்திணறலால் அவதிப்படும் மக்கள்

திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் குளங்களில் குப்பை கொட்டப்படுவதால் கடும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியும் ஒன்று. இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குங்கும் பாண்டி கோயில் குளம் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் குளங்களில் அதிகமான மழைநீரை சேமிக்க குடிமராமத்து பணியின் மூலம் பல லட்சம் செலவுசெய்து குளங்களை தூர்வாரி கரைகளை உயர்த்தியுள்ளனர்.


ஆனால் பொதுமக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத ஊராட்சி நிர்வாகம் வறண்டு கிடந்த குளத்தில் இருந்த மழை நீர் சேகரிப்பு குழிகளில் பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளது.

மலை போல் குவிந்துள்ள குப்பைகளை தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நாஃப்கின் போன்றவைகளை அங்கேயே வைத்து எரிக்கப்படுவதால் குளத்தின் அருகிலுள்ள விவசாயிகளுக்கும் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கும் நோய் தொற்றும், மூச்சுத்திணறலும் ஏற்படுவதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபற்றி ஊராட்சிமன்ற தலைவரிடம் கேட்டதற்கு இனிமேல் குளங்களில் குப்பையை கொட்டமாட்டோம். குப்பையை கொட்டுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com