புதுக்கோட்டையில் உரிமையாளர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பீரோவைத் திறந்து 10 சவரன் நகையை திருடிச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள சுந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அவர்கள் கொள்ளையடித்து செல்ல ஏதுவாக பீரோவின் சாவி, அதன் மேலேயே இருந்ததாக கூறப்படுகிறது. சாவியை எடுத்து பீரோவை திறந்த கொள்ளையர்கள், அதில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கலைச்செல்வி காலையில் எழுந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி, கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களின் உதவியோடு ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!