Published : 23,Jul 2020 08:24 PM

ஆந்திராவில் உச்சத்தை தொட்ட கொரோனா ! பாதிப்பு எவ்வளவு ?

Andhra-got-highest-corona-positive-cases-today

ஆந்திரம் மாநிலத்தில் இதுவரையில்லாத அளவுக்கு இன்று 7,998 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தை தொட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,998 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 72,711 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில் 1,391 பேருக்கும், குண்டூரில் 1184 பேருக்கும், அனந்தபூரில் 1,016 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

image

கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை ஆந்திர மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 37,555 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆந்திர மாநிலத்தில் 34,272 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் முதன்முறையாக இன்று முதல்முறையா 1078 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேரளாவில் இதுவரை பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 9,468 பேர் சிகிச்சை பெறுகின்றனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்