Published : 23,Jul 2020 04:02 PM

இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த் : சென்னை மாநகராட்சி

Rajinikanth-bring-E-pass-to-Kelambakkam---Chennai-Corporation

சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்வதற்கு ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்துவிட்டுச் சென்றதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் சென்னையிலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக செய்திகள் வெளிவர, ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா ? இல்லையா ? என்ற கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரித்து அறிவிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

image

இந்நிலையில் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றுதான் கேளம்பாக்கம் சென்றார் என சென்னை மாநகராட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர் இறப்பு, திருமணம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் நிலையில், ரஜினிக்கு எதன் அடிப்படையில் இ-பாஸ் வழங்கப்பட்டது என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மருத்துவ அவசரத்திற்காக என குறிப்பிடப்பட்டுள்ளது. 

8 ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரி : வருகிறது சாம்சங் ‘கேலக்ஸி எம்31எஸ்’

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்