Published : 23,Jun 2017 03:55 PM

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருக்கிறது: ஓபிஎஸ்

OPS-Speaks-about-ADMK-General-Secratary-Post

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வுக்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இணைப்பு பேச்சுவார்த்தை தற்போதைக்கு நடைபெறவில்லை. ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவினை தெரிவிப்பதற்காகவே டெல்லி வந்தேன். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக டெல்லி வரவில்லை. கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பொதுச்செயலாளரை யாரும் நியமிக்க முடியாது. அசாதரண சூழல் ஏற்பட்டால் உள்ளிட்ட அடுத்தக் கட்ட நிர்வாகிகள் கட்சியை வழிநடத்துவர். தற்போதுள்ள சூழலில் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. அதனால் இரட்டை இலைச் சின்னத்தை யாரும் கோர முடியாது என்று அவர் கூறினார்.  
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்