இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், பயிற்சியாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று உறுதியளித்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று ரவி சாஸ்திரி தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவிசாஸ்திரியின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து, அந்த பதவிக்கு விண்ணப்பித்த வீரேந்திர சேவாக், டாம் மூடி உள்ளிட்டவர்களிடம் நேர்காணல் விரைவில் நடத்தப்படும் என்று தெரிகிறது. அதேநேரம், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் மீது பிசிசிஐ நிர்வாகத்துக்கு திருப்தி ஏற்படவில்லை என்றும், இதனால் புதியவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய அணியின் இயக்குனராகப் பதவி வகித்த ரவி சாஸ்திரியே, அடுத்த பயிற்சியாளராக வேண்டும் என்று கேப்டன் விராத் கோலியும் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!