29 ஆக உயர்ந்த கிராமத்தின் மக்கள் தொகை: 8 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை!!

29 ஆக உயர்ந்த கிராமத்தின் மக்கள் தொகை: 8 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை!!
29 ஆக உயர்ந்த கிராமத்தின் மக்கள் தொகை: 8 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை!!

இத்தாலியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்த கிராமத்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இத்தாலியில் உள்ள லம்பார்டியில் உள்ள மலைக்கிராமம் தான் மார்டரோன். இந்த கிராமத்தில் வெறும் 28 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்தக் கிராம மக்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் கிராமத்தினரின் எண்ணிக்கை தற்போது 29ஆக அதிகரித்துள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள மட்டியோ-சாரா என்ற தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அக்குழந்தைக்கு டேனிஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் கிராமத்தில் குழந்தை பிறந்துள்ளதால் டேனிஷின் வரவை அந்த கிராமத்து மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இத்தாலி முறைப்படி ஆண் குழந்தை என்றால் வீட்டு வாசலில் நீலநிற நாடாவைக் கட்டுவார்கள். பெண் என்றால் பிங்க் நிற நாடா. 2012-ம் ஆண்டு பிங்க் நிற நாடா கட்டப்பட்டது. அதன் பிறகு தற்போது நாடாவுக்கு வேலை வந்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள குழந்தையின் தாய் கொரோனா போன்ற காலக்கட்டத்தில் கர்ப்பிணியாக இருப்பது சிரமம். வெளியே செல்ல முடியவில்லை. பிடித்தவர்களை சென்று பார்க்க முடியவில்லை. தற்போது எங்கள் ஊரில் மக்கள் தொகை 29ஆக அதிகரித்துள்ளது. வேறு யாரும் இங்கு கர்ப்பிணியாக தற்போது இல்லை. ஆனாலும் டேனிஷின் வரவு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com