Published : 23,Jun 2017 01:02 PM

லாரி கவிழ்ந்து ஒரு லட்சம் முட்டை நாசம்

Eggs-Breakdown-Due-to-lorry-accident-in-Tamilnadu

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே முட்டை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதிலிருந்த ஒரு லட்சம் முட்டைகளும் உடைந்து நாசமாயின.

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், முட்டைகள் ஏற்றிச் சென்ற போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் உளுந்தூர்பேட்டை அருகே லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு லட்சம் முட்டைகள் உடைந்து நாசமாயின. இச்சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்