Published : 23,Jun 2017 12:59 PM
ஹரியானா கிராமத்துக்கு ட்ரம்ப்பின் பெயர்

ஹரியானாவில் உள்ள சிறிய கிராமம் ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை கௌரவிக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள மரோரா கிராமத்துக்கு ட்ரம்ப்பின் பெயரை தொண்டு நிறுவனமான சுலப் இன்டர்நேஷனல் சூட்டியுள்ளது. இந்த பெயர் மாற்றத்துக்கு அரசு தரப்பில் இருந்து அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. வரைபடங்களிலும் இந்த பெயர் இடம்பெறாது என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ட்ரம்ப் என்பவர் யார் என்றே, அந்த கிராமத்தில் வசிக்கும் 400க்கும் மேற்பட்டோருக்கு தெரியவில்லை. இருப்பினும், தொண்டு நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்படும் இலவச கழிவறைகளுக்காக பெயர் மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டதாக மக்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக பேசிய சுலப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் பிண்டேஷ்வர் பதக், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடு ஒன்றின் அதிபராக ட்ரம்ப் இருக்கிறார். அதனாலேயே அவரது பெயரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார். அந்த கிராமத்தின் முகப்பில் ட்ரம்ப் கிராமம் என்ற பெயரைத் தாங்கிய பெரிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.