Published : 21,Jul 2020 03:30 PM
ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரும் பிசிசிஐ

கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகி மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆஸ்திரேலியாவில் நடத்த முடிவு செய்திருந்த டி20 உலக கோப்பை தொடரை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்ததை தொடர்ந்து அந்த இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகம் இருப்பதனால் ‘எங்கள் நாட்டில் நடத்தலாம்’ என இலங்கையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தன.
இந்நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளது “ஐபிஎல் அட்டவணை சம்மந்தமாக அடுத்த பத்து நாட்களுக்குள் எல்லோரோடும் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னர் அது குறித்த இறுதி முடிவை எடுக்க உள்ளோம். எதுவாக இருந்தாலும் ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி வேண்டும். அதனால் தற்போது அரசிடம் கோரிக்கையை வைத்துள்ளோம். பிசிசிஐ-யும் அரசிடம் இது தொடர்பாக அனுமதி கோரியுள்ளது” என்றார்.