அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் ஆயுதங்களை காட்டி 2 லட்சம் பணம் கொள்ளை!

அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் ஆயுதங்களை காட்டி 2 லட்சம் பணம் கொள்ளை!
அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் ஆயுதங்களை காட்டி 2 லட்சம் பணம் கொள்ளை!

குமாரபாளையம் அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்களை அரிவாள் உருட்டு கட்டைகளால் தாக்கி 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கவுண்டனூர் என்னும் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் நேற்று இரவு 8 மணிக்கு வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு விற்பனையான தொகை சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயினை பையில் எடுத்துக்கொண்டு கடை ஊழியர்கள் ராஜ்குமார், சரவணன் மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பேரும் வெளியில் வந்துள்ளனர்.

அப்போது கடை முன்பு நின்றிருந்த 4 பேர் சரவணன் வைத்திருந்த பணப்பையினை பிடுங்க முயன்றனர். இதை தடுத்த ராஜ்குமார் மற்றும் ரமேஷை கொள்ளையர்கள் அரிவாள், உருட்டுக் கட்டை, மதுபாட்டில்களால் தாக்கினர். மேலும், பணப்பை வைத்திருந்த சரவணனையும் அரிவாளால் தாக்கி பணப்பையை பிடுங்கி கொண்டு தாங்கள் வந்த 2 சக்கரவாகனங்களில் தப்பி சென்றுவிட்டனர்.

அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு மதுபானக் கடை ஊழியர்களை தாக்கி 2 இலட்சத்து 15 ஆயிரம் கொள்ளைபோன சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com