Published : 21,Jul 2020 09:27 AM

'ரிஷப் பண்ட் இந்திய அணியின் சிறந்த இளம் பேட்ஸ்மேன்' -சுரேஷ் ரெய்னா

Rishab-Pant-is-the-best-young-batsman-in-the-Indian-team-says-Suresh-Raina

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா அண்மையில் 'ரிஷப் பண்ட் இந்திய அணியின் சிறந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்' என சொல்லியுள்ளார்.

image

"எந்தவித சமரசமும் இன்றி பண்ட் இயல்பான ஆட்டத்தை அவர் விளையாட வேண்டும். அப்படி செய்தாலே நிறைய ரன்களை அவரால் குவிக்க முடியும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
ரெய்னாவும், பண்டும் இணைந்து உத்தர பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இணைந்து வலை பயிற்சி செய்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலினால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில் அவர்களது வலை பயிற்சி மற்றும் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். 
image
ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
மறுபக்கம் பேசிய ரிஷப் பண்ட் "2011இல் இந்தியாவுக்காக உலக கோப்பை வென்று கொடுத்த வீரரோடு இணைந்து பயிற்சி செய்வது நல்ல அனுபவமாக அமைந்துள்ளது. அவரோடு இணைந்து பயிற்சி மேற்கொள்ளும் போது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. கிரிக்கெட் குறித்து அவரோடு நிறைய பேசுவது எனது கேமை மேம்படுத்த உதவுகிறது. 
image
கொரோனாவினால் பல மாதங்களாக பயிற்சி செய்யாமல் இருந்து விட்டேன். அதனால் தான் இப்போது பயிற்சியை ஆர்மபித்துள்ளேன். வீட்டிலேயே இருப்பது ஒரு விதமான சோம்பலை ஏற்படுத்தி விடும். அதனால் இந்த பயிற்சி வரவிருக்கும் நாட்களில் நான் கிரிக்கெட் விளையாட கைகொடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்