[X] Close

சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டம்

Modi-govt-to-check-anti-India-activities-on-social-media

சமூக வலைதளங்களில் எம்மாதிரியான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. அவை தேச விரோதக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

தேசத்துக்கு எதிரான கருத்துகள் மற்றும் தேச ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலான கருத்துகளைப் பரப்ப சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமூகவலைதள பாதுகாப்பு தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய கொள்கை ஒன்றை வகுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி தீவிரவாத கருத்துகளை பரப்ப தேர்ந்தெடுக்கப்படுபவரைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல் மற்றும் அவர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்குவது என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை செய்யக் கூடாதது எது? செய்யக் கூடியது எது என்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. இவற்றை முழுமையான வழிகாட்டுதல் நெறிமுறைகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.  
 


Advertisement

Advertisement
[X] Close