இன்று அதிகாலை முதலே டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு அருகிலுள்ள ஆதம்பூர், ஹிசார், பரூட், ரோஹ்தக், சோனிபட், குருகிராம், நோய்டா, காசியாபாத் மற்றும் பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனத்த மற்றும் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
காலையில் பெய்த தொடர் மழையால் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகாலை 5.30 மணி வரையில் 4.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் டெல்லி கனமழையால் பாலம் ஒன்றின் கீழ் தேங்கியிருந்த நீரில் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பயணிகளை அதிரடியாக மீட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி கனமழையால் பாலம் ஒன்றின் கீழ் தேங்கியிருந்த நீரில் சிக்கிக் கொண்ட பேருந்து: பயணிகளை அதிரடியாக மீட்ட தீயணைப்புத்துறையினர்! #DelhiRains #Downpour #Rescue #MintoBridge pic.twitter.com/4nGB0t1tYw— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 19, 2020
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!