குடும்ப வறுமையை பயன்படுத்தி 16 வயது சிறுமியை ஏமாற்றி, பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே குருசடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 16 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக, ’சைல்டு ஹெல்ப்லைனு’க்கு தகவல் வந்தது. அதன் பேரில் சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு அதிகாரி ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்றனர். அது பள்ளம் துறையை சேர்ந்த ராபர்ட் பெல்லார்மின் (41) என்பவர் வீடு. உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டில் சிறுமி சிறை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து அவரை அதிகாரிகள் மீட்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கடன் தொல்லைகளில் இருந்து காப்பாற்றுவதாக சிறுமியின் பெற்றோரிடம் சொல்லி, அவரை அழைத்து வந்துள்ளார் பெல்லார்மின். பின்னர் திருசெந்தூரில் ஒரு வழிபாட்டு தளத்தில் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை இங்கு தங்க வைத்துள்ளார்.
இதுபற்றி அந்தச் சிறுமி, பணம் தருவதாக தன்னையும் குடும்பத்தையும் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமுலத்தின் அடிப்படையில் பெல்லார்மின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை தேடிவருகின்றனர் .
Loading More post
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்