[X] Close

நாயிடமிருந்து தங்கையைக் காப்பாற்றிய வீரச்சிறுவனின் உடம்பில் 90 தையல்!

இந்தியா,உலகம்

90-stitches-on-the-body-of-the-heroic-boy-who-saved-his-sister-from-the-dog-
இன்ஸ்ட்ராகிராம் பிரபலங்களின் புகைப்படங்களுக்கு மத்தியில் நாயுடன் சண்டைப் போட்டு தங்கையை காப்பாற்றிய ஆறுவயது வீரச்சிறுவனின் புகைப்படம் வைரலாகி மில்லியன் கணக்கில் லைக்ஸை அள்ளிக்கொண்டிருக்கிறது.
 
திடீரென்று, தனது தங்கையை கடிக்க வந்த நாயைப் பார்த்துவிட்டு பயந்து தப்பித்து ஓடாமல், தில்லாக எதிர்த்து நின்று தடுத்திருக்கிறான் அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் பிரிட்ஜர். முகத்திலும் தலையிலும் கடித்துவிடுகிறது நாய். ஆனாலும் பயப்படாமல் நாயுடன் சண்டைபோட்டு தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறான் பிரிட்ஜர். 
 
image
 
பதறிப்போன பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்கள். வீரச்சிறுவனின் முகம் மற்றும் தலையில் 90 தையல்கள் போடும் அளவிற்கு நாய் கடித்திருப்பதைப் பார்த்து டாக்டர்களே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். நடந்த சம்பவம் குறித்து சிறுவன் பிரிட்ஜரின் அத்தை நிக்கி வாக்கர் பேசியபோது, அவன் கூறிய வார்த்தைகள்தான் இன்னும் வீரமிகுந்தது.   ‘என் கண் முன்னால் யாராவது சாகப்போவது தெரிந்தால், அது என் சாவு போன்றது. அது, நானாக இருக்கவேண்டும் என்றுதான் நினைப்பேன். இன்னொருவரை, சாகவிடமாட்டேன். அதனால்தான் நாயுடன் சண்டை போட்டேன்’ என்றுக்கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளான்.
 
 
இச்சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பெருமையுடன் பதிவுசெய்துள்ளார் பிரிட்ஜரின் அத்தை நிக்கி வாக்கர். மேலும், அவர்  ‘எனது மருமகன் தனது தங்கையை தாக்கிய நாயிடமிருந்து காப்பாற்றிய ஹீரோ. எங்களுடைய தைரியமான பிள்ளையை நாங்கள் நேசிக்கிறோம். அவனால், சிரிக்கமுடியவில்லை.  இன்ஸ்டாகிராமில் அவனைக்குறித்த பாராட்டுக்களைப் பார்த்துவிட்டு நெகிழ்ச்சியோடு சிரித்திருக்கிறான். எங்கள் மருமகனை கடித்துக் குதறிய நாயின், உரிமையாளரிடம் நாங்கள் எந்த மனக்கசப்பையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இச்சம்பவத்தால் எங்கள் குடும்பத்தினரிடையே இன்னும் அன்பு அதிகரித்திருக்கிறது’ என்று பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார்.
  
கிறிஸ்டோபர் நோலனின்  கடைசி பேட்மேன் படமான ‘தி டார்க் நைட் ரைசஸ்’ படத்தின் கதாநாயகி அன்னே ஹாத்வே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் ஒரு அவெஞ்சர் அல்ல. ஆனால், ஒரு சூப்பர் ஹீரோவைப் பார்க்கும்போது எனக்கு தெரியும். பிரிட்ஜரைப்போல என் வாழ்க்கையில் பாதி அளவில் இருக்கிறேன்” என்று பதிவிட்டதற்கு 1 மில்லியன் லைக்ஸுக்குமேல் குவித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதேபோல், சிறுவனின் அத்தை நிக்கி வாக்கர் பதிவுக்கும் 1 மில்லியன் லைக்ஸை வாரிக் குவித்திருக்கிறார்கள்.
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close