அதே நாள், அதே நேரத்தில் கொலை! வியாசர்பாடி கொலையில் திடுக்!

அதே நாள், அதே நேரத்தில் கொலை! வியாசர்பாடி கொலையில் திடுக்!
அதே நாள், அதே நேரத்தில் கொலை! வியாசர்பாடி கொலையில் திடுக்!

சென்னையில் பட்டப்பகலில் ரவுடி தியாகராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் பட்டப்பகலில் ஓட்டுநர் பயிற்சி ‌பள்ளிக்குள் புகுந்து ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மாதவரத்தைச் சேர்ந்த ரவுடி தியாகராஜன், வியாசர்பாடி‌ ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது 3 பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் அடங்கிய கும்பல் தியாகராஜனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றது.

கொலையான தியாகராஜன், மாதவரத்தை சேர்ந்த போத்தீஸ் முரளி என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற தியாகராஜன், பின் ஜாமீனில் வந்துள்ளார். பிறகு திருவான்மியூர், திருவொற்றியூர், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவுடிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது, மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இது தொடர்பாக அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் சிறையில் உள்ள ரவுடிகள், செல்போன் மூலம் தியாகராஜனின் அண்ணனிடம், எச்சரிக்கை செய்ததாகக் கூறப்படுகிறது. பிறகு மாதவரத்தில் இருந்து தியாகராஜன், வியாசர்பாடி பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். நேற்று தனது நண்பரின் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் அவரை பின்தொடர்ந்து கொலை செய்துள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் பிரதான சாலையில், 2016 ஜூன் 22 காலை 9.30 மணிக்கு வழக்கறிஞர் ரவி என்பவர் கொல்லப்பட்டார். ஓர் ஆண்டுக்குப் பிறகு அதே நாள், அதே நேரம் தியாகராஜன் கொல்லப்பட்டிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் ரவியின் கூட்டாளிகள் யாராவது தியாகராஜனை தீர்த்து கட்டினர்களா அல்லது போத்தீஸ் முரளி கொலை வழக்கில் பழிக்குப்பழியாகக் கொலை செய்யப்பட்டாரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com