Published : 14,Jul 2020 03:01 PM

மத்திய சிறை கைதிகளுக்கு சிம்கார்டு, போதைப்பொருள் : புதுச்சேரியில் பரபரப்பு

4-men-given-drugs-and-simcard-to-central-jail-prisoners-in-puducherry

புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிம்கார்டு மற்றும் போதை பொருள்கள் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறையில் உள்ள கைதிகள் சிலருக்கு தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை, அவர்களது ஆதரவாளர்கள் கொடுத்துச் சென்றுள்ளனர். இதனை சிறை காவலர்கள் சோதனை செய்த போது அந்த பொருள்களில் சிம்கார்டு மற்றும் புகையிலை, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

புதுச்சேரி சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. தடுக்க சென்ற காவலர்கள் 4 பேர் படுகாயம்! | Fighting between prisoners at Puducherry central jail - Tamil Oneindia

இது குறித்து காலாப்பட்டு காவல்நிலையத்தில் சிறை நிர்வாகம் புகார் கொடுத்ததை அடுத்து காலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைதிகளுக்கு பொருள்களை கொடுத்த சுரேஷ், சீத்தாராமன், இளஞ்செழியன், கார்த்திகேயன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காலாப்பட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்