Published : 13,Jul 2020 06:45 PM

விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது

electricity-board-engineer-arrested-due-to-bribery-case

விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க 5000 லஞ்சம் பெற்ற மின்வாரிய இளநிலை பொறியாளர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் அணைகட்டு தாலுக்கா அரிமலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரேம்நாத். இவரின் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு வேப்பங்குப்பத்தில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

image

இந்நிலையில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கொடுக்க இளநிலை பொறியாளர் ஜெய்சங்கர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விவசாயி பிரேம்நாத் இது குறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பிரேம்நாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

imageஇதனையடுத்து இன்று விசவாயி பிரேம்நாத் ரசாயனம் தடவிய லஞ்சப்பணம் 5 ஆயிரத்தை இளநிலை பொறியாளர் ஜெய்சங்கரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஜெய்சங்கரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து லஞ்சம் பணம் 5000 பறிமுதல் செய்தனர்.

மேலும் சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இளநிலை பொறியாளர் ஜெய்சங்கரை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.