WWE சூப்பர் ஸ்டாரான ஜான் சீனா, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனை அவர்களே தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கொரோனா குறித்து பதிவிட்டிருந்த அபிஷேக் பச்சன், ‘எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி’ எனத் தெரிவித்திருந்தார்.
இருவருக்கும் கொரோனா உறுதியான நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் யாருக்கும் கொரோனா இல்லை என முதலில் தகவல் வெளியானது. பின்னர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்
மற்றும் அவர்களது மகள் ஆராதனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர்
ராஜேஷ் டொப் தெரிவித்தார்.
இதனால், அமிதாப் குடும்பத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அமிதாப்
குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டுமென பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் WWE சூப்பர் ஸ்டாரான ஜான் சீனா
தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது திரைப்படங்களில்
நடித்து வரும் ஜான்சீனாவுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வரும் ஜான்சீனா, அவ்வப்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் இந்திய செலிபிரிட்டிகள் தொடர்பாக புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புட், ரிஷி கபூர், இம்ரான்கான் ஆகியோரின் புகைப்படங்களையும் அவர் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார். எந்த தலைப்பும் இடாமல் புகைப்படத்தை மட்டுமே பகிர்வதை ஜான்சீனா வழக்கமாக கொண்டுள்ளார்
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்