கொரோனா அறிகுறி இருந்ததால் பேருந்திலிருந்து இழுத்து தள்ளப்பட்ட இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார்.
டெல்லியின் நொய்டாவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் சிகோஹாபாத்துக்கு சாலை மார்க்கமாக 19 வயது இளம்பெண் அன்சிகா யாதவ், தனது தாயாருடன் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இருமல் ஏற்பட்டதாகவும், கொரோனாா அறிகுறிகள் தென் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை பேருந்தில் இருந்து இறங்க வேண்டும் என சகபயணிகள் கூச்சலிட்டு உள்ளனர்.
இதையடுத்து அன்சிகா போர்வையில் சுற்றி நடத்துனரும் ஓட்டுனரும் கீழே தள்ளியதாக தெரிகிறது. அப்போது அவரின் தாயார் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாத இருவரும் தாய், மகளை வெளியில் பிடித்து தள்ளியுள்ளனர். அனல் காற்று வீசிய அந்தச் சாலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில் மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவர் இயற்கையாக உயிரிழந்தார் என காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடத்துனரும் ஓட்டுனரும் அன்சிகாவை கீழே தள்ளியதால் அதில் பாதிக்கப்பட்டே அவர் உயிரிழந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம்சட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அன்சிகாவின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?