
புஷ்கர் காயத்ரி இயக்க மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் வேதா படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 2.31 நிமிடம் நீளும் இந்த ட்ரெய்லரில் மாதவன் விஜய் சேதுபதி பேசிக்கொள்ளும் அதிரடியான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் வேதாவில் நடிகர் கதிர், வரு சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதில் விஜய் சேதுபதி ரௌடியாகவும் மாதவன் போலீசாகவும் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படத்தின் பாடல்கள் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் வேதா ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.