[X] Close

‘சேவாக் போன்ற திறமையுடையவர் பிரித்வி ஷா.. ஆனால்’: வசிம் ஜாபர்

விளையாட்டு

Prithvi-Shaw-Has-the-Ability-of-Virender-Sehwag--Needs-to-Get-More-Disciplined-Off-Field--Wasim-Jaffer

இந்திய அணியின் இளம் ஆட்டகாரரான பிரித்வி ஷா, வீரேந்தர் சேவாக் போன்ற ஆட்டத்திறன் உடையவர் என்று வசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

இளையோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து சீனியர் அணிக்கு பல்வேறு வீரர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் மிகவும் முக்கியமானவராக பிரித்வி ஷா திகழ்கிறார். இவரது ஆட்டத்திறன் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்திய அணியிலும், ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால், இவர் பலருடன் ஒப்பிட்டு பேசப்படுகிறார். இருப்பினும், அளவுக்கு அதிகமான ஊக்க மருந்து உட்கொண்ட பிரச்னையில் சிக்கி சில மாதங்கள் தடையையும் அனுபவித்தார்.

image


Advertisement

இந்நிலையில், பிரித்வி ஷா குறித்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மிக முக்கியமான வீரராக திகழ்ந்த வாசிம் ஜாபர் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். வீரேந்தர் சேவாக் போன்ற ஆட்டத்திறன் உடையவர் பிரித்வி ஷா என்றும், ஆனால் ஆட்டத்திற்கு வெளியே அவரது ஒழுங்கை அவர் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜாபர் தெரிவித்துள்ளார். “பிரித்வி ஒரு சிறப்பான வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் அடிக்கும் ஷாட்கள் சிறப்பானவை. இதேபோன்று அவர் விளையாடினால் வீரேந்திர சேவாக்கை போன்று ஆட்டத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது” என்று யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜாபர் கூறியுள்ளார்.

image

மேலும் அவர் கூறுகையில், “பிரித்வி ஷா ஆட்டத்தை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் போது ஷார்ட் பந்துவீச்சில் ஒரே மாதிரி இரண்டு முறை அவர் ஆட்டமிழந்தார். ஆடுகளத்திற்கு வெளியே அவர் சற்று ஒழுங்குடன் இருக்க வேண்டும். சர்வதேச அளவில் அவர் ஒரு வெற்றியாளராக அவர் வருவதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.

ஜூன் 2021 வரை தள்ளிவைக்கப்பட்ட ஆசிய கிரிக்கெட் கோப்பை..!

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close