கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஜூன் 2021ஆம் ஆண்டு வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் இணைந்து விளையாடும் ‘ஆசிய கோப்பை’ கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தப் போட்டி தள்ளிவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடர்பாக ஆசிய கிரிக்கெட் ஆணையத்தின் சார்பில் செயற்குழு ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் ஆசிய கோப்பையை ஜூன் 2021 வரை தள்ளி வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கெட் ஆணையம், திட்டமிட்ட தேதியில் ஆசிய கோப்பையை தொடங்க நினைத்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் நாடுகள் கடந்து பயணிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்த வேண்டிய விதிமுறைகள், அடிப்படை சுகாதார பிரச்னைகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட காரணங்களால் ஆசிய கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரணங்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள், இதர பணியாளர்கள், வர்த்தக பங்குதாரர்கள், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகத்தினரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கருதியும் தொடர் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 20201ஆம் ஆண்டு வரை தொடர் தள்ளி வைக்கப்படுவதாகவும், அதன்பின்னர் சரியான கால அட்டவணையை தேர்வு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!