[X] Close

தேசிய கீதத்தை மாற்றியமைக்கும் பாகிஸ்தான் 

Pakistan-to-rearrange-national-anthem-to-represent-cultural-diversity

கலாச்சார வேறுபாடுகளை பிரதிபலிக்கும் வகையில் தனது நாட்டு தேசிய கீதத்தை மாற்றியமைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்காக உலகத்தரத்திலான ஆர்கெஸ்ட்ரா இசையுடன் புதிய தேசிய கீதத்தை இசைத்து பதிவு செய்யுமாறு, பாகிஸ்தான் தேசிய கலைக்கழகத்தை அரசு பணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முடிவு அந்நாட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் மரியம் ஔரங்கசீப் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யவும், அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ’குவாமி தரானா’ (Qaumi Taranah) மற்றும் பாக் சர்ஜாமின் (Pak Sarzamin) ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாகிஸ்தானின் தேசிய கீதத்தை கடந்த 1952ல் ஹஃபீஸ் ஜலுந்தரி என்பவர் இயற்றினார். அந்நாட்டு தேசிய கீதத்துக்கு அகமது ஜி. சக்லா இசையமைத்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close