[X] Close

நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ தலையிட முடியாது: எடப்பாடி பழனிசாமி

CBI-Can-not-intervene-Trust-Vote--CM-Palanisamy

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சிபிஐ விசாரிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பாக வெளியான வீடியோவின் அடிப்படையில் சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு விசாரிக்கக் கோரி ஸ்டாலின் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக முதலமைச்சரும், பேரவை செயலாளரும் மனுத் தாக்கல் செய்தனர். அதில், சபாநாயகரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவினரை எதிர் மனுதாரராக சேர்க்க முடியாது என்று முதலமைச்சர் கூறியுள்ளார். பேரவை உரிமைகளுக்குட்பட்ட விவகாரத்தில் எந்த வித புலனாய்வு அமைப்பும் தலையிட முடியாது என பேரவை செயலாளரும் பதில் மனுவில் தெரிவித்துள்ளார். அதேவேளையில், திமுக அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சபாநாயருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதையும் பேரவை செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் முன்பு ஆஜரான திமுக மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இதற்கு திமுக தரப்பில் பதில் அளிக்க தயாராக இருப்பதால் விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்தவாரத்திற்கு ஒத்திவைத்தார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close