Published : 06,Jul 2020 08:08 PM

கொரோனா பாதிப்பு: சிகிச்சைப்பலனின்றி மகப்பேறு, ஹோமியோபதி மருத்துவர்கள் உயிரிழப்பு

doctors-died-due-to-covid-19-in-perambalur

கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த கிருஷ்ணாபுரம் ஹோமியோபதி மருத்துவர் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாள்தோறும் 4 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இறப்பு விகிதம் குறையவில்லை. இன்று மட்டும் 61 கொரோனா மரணங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்பு சதவீதம் 1.36 ஆக உள்ளது.

image

கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி முன்கள வீரர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களும் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், இரண்டு மருத்துவர்கள் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணாபுரம் ஹோமியோபதி மருத்துவர் செந்தில்குமார் கொரோனா தொற்று காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் நபர் இவராவார்.

image

இதேபோல், கும்பகோணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த பெண் மகப்பேறு மருத்துவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

கும்பகோணம் பக்தபுரித் தெருவை சேர்ந்த 72 வயது பெண் மகப்பேறு மருத்துவர் விஷ்ணுப்பிரியா தனது வீட்டின் அருகிலேயே நர்சிங் ஹோம் நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 1-ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அவருக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிக்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் மருத்துவ விதிகளின் படி உறவினர்கள் முன்னிலையில் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் மகப்பேறு மருத்துவரின் நர்சிங் ஹோமில் பணியாற்றிய 4 பெண்களுக்கும், உறவினர்கள் நான்கு பேருக்கும் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதால், அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்