சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மேய்ச்சலின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை கடித்ததில் பசுமாடு உயிரிழந்தது.
தமிழகம் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி, திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. மானாவாரி விவசாயியான இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கிராமத்தையொட்டியுள்ள வனத்தில் கால்நடைகளை மேய்த்து வந்த இவர். திகினாரை குட்டையில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது குட்டையில் காட்டுப்பன்றியை வேட்டையாட மறைத்து வைத்திருந்த அவுட் காய் எனப்படும் நாட்டுவெடியை கடித்ததில் மாடு படுகாயம் அடைந்தது.
இதில் அதன் வாய்ப்பகுதி சிதைந்து சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை உலுக்கியது. மேலும் திகினார் சிறுவர்கள் விளையாடும் இடம் என்பதால் அங்கு மறைத்து வைக்கப்படும் நாட்டு வெடியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டு வெடியை வைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!