மதுரையில் கொரோனா அறிகுறியோடு சாலையில் 2 நாட்கள் கிடந்த முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் டிவிஎஸ் நகர் மாடக்குளம் செல்லும் மேம்பாலம் அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரானா அறிகுறியோடு இருந்தார். உடல் நலிவுற்று கடுமையான மூச்சுத்திணறல் பாதிப்பால் இரண்டு நாட்களாக மயங்கியிருந்த அவரை பார்த்த மக்கள், சுப்பிரமணியபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் அது பிரசவத்திற்கான வாகனம் எனவும், முதியவருக்கு கொரானா அறிகுறி இருப்பதால் ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாது எனவும் கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப்பின் 108 வாகனம் மூலம் சாலையில் கிடந்த முதியவர் மீட்கப்பட்டு, ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முதியவர் உடலில் துணி எதுவும் இல்லாமல் சாலையில் இரண்டு நாட்கள் கொரோனா அறிகுறியோடு கிடந்ததால், அவர் இருந்த இடத்தில் தூய்மைப்பணியாளர் கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்