"நேரில் வராமல் வாட்ஸ் அப் வீடியோகால் மூலம் புகார் அளிக்கலாம்” - சென்னை காவல்துறை

"நேரில் வராமல் வாட்ஸ் அப் வீடியோகால் மூலம் புகார் அளிக்கலாம்” - சென்னை காவல்துறை
"நேரில் வராமல் வாட்ஸ் அப் வீடியோகால் மூலம் புகார் அளிக்கலாம்” - சென்னை காவல்துறை

பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக வந்து சந்திக்காமல் வாட்ஸ் அப் வீடியோகால் மூலம் தெரிவிக்கலாம் எனச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே நடமாட வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகச் சந்திக்காமல் வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் எனச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. அதற்கான தொலைபேசி எண்ணையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில்,

'' சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளைக் காவல் ஆணையாளரை நேரடியாகச் சந்தித்துத் தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணி வரை புகார் தெரிவித்துப் பயனடையலாம்.

அதன்படி, இன்று (03.07.2020) வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை மேற்கண்ட வாட்ஸ் அப் எண்ணில் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. பொதுமக்கள் காணொளி மூலம் புகார் தெரிவித்துப் பயனடையும் படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com