போலி டாக்டர் கைது: ‘படித்தது 10வது, பார்த்தது ஆங்கில மருத்துவம்’

போலி டாக்டர் கைது: ‘படித்தது 10வது, பார்த்தது ஆங்கில மருத்துவம்’
போலி டாக்டர் கைது: ‘படித்தது 10வது, பார்த்தது ஆங்கில மருத்துவம்’

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வெறும் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு 5 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்துவந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக மாவட்ட அட்சியருக்கு வந்த புகாரை அடுத்து நாக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் ராசிபுரம் மற்றும் குருசாமிபாளையம் பகுதிகளில்  ஆய்வு மேற்கொண்டனர். இதில் குருசாமிபாளையம் பகுதியில் பாலுசாமி (67) என்பவரது மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். இதில் பாலுசாமி என்பவர் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு கடந்த 5 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாலுசாமியை சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது செய்து புதுசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com