சென்னையில் இதுவரை முழு ஊரடங்கு (144 தடை) உத்தரவை மீறிய 56,583 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கைத் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதிவரை அமலில் உள்ளது.
இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 56,583 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது பதிவான வழக்குகள் 22723 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முழு ஊரடங்கைப் பின்பற்றாமல் சுற்றிய 49,848 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?