Published : 27,Jun 2020 10:24 AM

சாத்தான்குளம் உயிரிழப்பு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை தேவை - ஹெச்.ராஜா

H-raja-tweets-about-sathankulam-father-son-died-case

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 19ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறி கடையை திறந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

image

விசாரணைக்கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 அந்த வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "சாக்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கான மாஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்