"இந்தியா-சீனா பிரச்னையை தீர்க்க வெளியாட்கள் தேவையில்லை" - ரஷ்யா

"இந்தியா-சீனா பிரச்னையை தீர்க்க வெளியாட்கள் தேவையில்லை" - ரஷ்யா

"இந்தியா-சீனா பிரச்னையை தீர்க்க வெளியாட்கள் தேவையில்லை" - ரஷ்யா

இந்தியா சீனா இடையிலான பிரச்னைகளை தீர்க்க வெளியாட்களின் உதவி தேவையில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.


கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீனப் படைகள் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் ரிக் எனப்படும் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இரு நாட்டு பிரச்னையில் ரஷ்யா மத்தியஸ்தம் செய்யும் என கூறப்பட்டது. இந்த சூழலில், கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா சீனா இடையிலான பிரச்னையை தீர்க்க வெளியாட்களின் உதவி தேவையில்லை என்றும் அவர்களே அவர்களின்  பிரச்னைகளை தீர்த்து கொள்வர் என்றும் கூறியுள்ளார். மேலும் இருநாடுகளும் அமைதியான முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாகி உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com