கோவை போத்தனூர் அருகே சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை அடுத்த போத்தனூர் அருகே உள்ள பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா. இவருக்கு வயது 66. இவர் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாஷா சிறுமிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். அதில் “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு ஒகே வா” என எழுதியிருந்தாகக் கூறப்படுகிறது.
இதனைச் சிறுமி அவரது பெற்றோரிடம் கொண்டு கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாரிடம் இத்தகவலைத் தெரிவித்து அவரைக் கண்டித்துள்ளனர். ஆனால் பாஷாவோ அதைப் பற்றியெல்லாம் கவலைக்கொள்ளாமல் மீண்டும் சிறுமியை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயந்து போனச் சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமால் இருந்துள்ளார். இதனால் வேதனையடைந்த பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் முதியவரை கைது செய்து அவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?